Tuesday, 19 July 2011


வீட்டினை குளிர் படுத்தும் சாதனங்களை புழங்க நீ
பனி மலைகளை வெட்பத்தால் சிதைத்து வந்தாய்
உன் குலம் மகிழ்வுடன் என்றும் விளங்க நீ
உயிர் இனங்கள் அனைதிற்க்கும் இன்னல் தந்தாய்
தனித்த பொது அறிவை பெற்றிருந்தாலும் நீ
மதியினை இழந்த மூடனாய் வையத்தில் நின்றாய்
தாயாய் உனை ஈன்றெடுத்தது தரணியானாலும் நீ
அவள்பெற்ற உன் உடன்பிறப்பாம் விலங்கினத்தை கொன்றாய்

கடலுக்கு காலை உணவாக கழிவினை தந்த உனக்கு
கடல் தந்த பரிசை மறந்து விடாதே
உயர்தினை செழித்தல் போதும் மற்றவை வாழ்வது எதற்கு
என்ற கொள்கையை சமூகத்தில் விதைத்து விடாதே

நிலம் நீர் ஆகாயம் காற்று
இவற்றை அடக்கி ஆள நீ கடவுள் கிடையாது
ஆணவத்தையும் அதிகாரத்தையும் மாற்று
சுயநலத்தால் இன்பம் விளையாது
குரங்காய் நீ இருந்தாய் நேற்று
உனக்கு உயிரின் அர்த்தம் புரியாது
இயற்க்கை வளமே அமுத ஊற்று
அதை பருகினால் இன்பம் தொலையாது

மனிதருக்குள் விளயும் ஏற்றத்தாழ்வை அகற்ற குரல் தந்தாயே
மற்ற உயிர்களுக்கும் பங்கு கொடு
அறிவியல் வளர்வதற்க்கு அயராது உழைத்து வந்தாயே
இந்த பூமியையும் வாழ விடு

1 comment:

  1. Very first line itself is excellent

    வீட்டினை குளிர் படுத்தும் சாதனங்களை புழங்க நீ
    பனி மலைகளை வெட்பத்தால் சிதைத்து வந்தாய்

    ReplyDelete